சிங்கப்பூரில் கிருமித்தொற்றை கட்டுப்படுத்த தேவையான வசதிகளுக்கு S$804 மில்லியன் செலவு..!

Covid-19 facilities spent cost
(Photo: TODAY)

சிங்கப்பூரில் கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்த தேவையான வசதிகளுக்காக சுமார் S$804 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ஹோட்டல்கள், அரசாங்க சொத்துக்கள் மற்றும் சிங்கப்பூர் எக்ஸ்போ (Singapore Expo) ஆகியவற்றில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டனர். இதனை தேசிய வளர்ச்சி அமைச்சர் டான் கியெட் ஹாவ் (Tan Kiat How) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம்..!

அந்த இடங்கள் கடந்த மாதங்களில், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகள் அல்லது வீட்டில் தங்கும் அறிவிப்புகளை நிறைவேற்றும் தற்காலிக வசதிகளாக இருந்தது, அதே போல கோவிட் -19 நோயாளிகளை தனிமைப்படுத்தவும் அவைகள் பயன்படுத்தப்பட்டன.

அதே போல, முன்னாள் பள்ளி கட்டிடங்கள் போன்ற அரசாங்க சொத்துக்களும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக தங்கும் இடங்களாக மாற்றப்பட்டன.

அந்த வசதிகளில் உச்ச அளவாக, சுமார் 100,000 பேர் தங்கியிருக்கக்கூடும் என்று திரு டான் கூறினார்.

இதுபோன்ற வசதிகளுக்காக அரசாங்கம் எவ்வளவு செலவு செய்துள்ளது என்ற, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லியோங் முன் வாயின் கேள்விக்கு திரு டான் பதிலளித்தார்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், கோவிட் -19க்கு முந்தைய நிலைக்கு அந்த பல்வேறு வசதிகள் திரும்பி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்திற்கு தொற்று பாதித்த நபர்கள் சென்றுள்ளனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…