புதிதாக வெளியாகியுள்ள iPhone 12 pro வாங்க சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் எவ்வளவு நாட்கள் சராசரியாக வேலைக்கு செல்ல வேண்டும்..?

Singapore Iphone 12 pro Picodi
Photo Credit : Picodi

சிங்கப்பூரில் மாதத்திற்க்கு S$3,000 வருமானம் ஈட்டும் ஒருவர் ஒரு புதிய iPhone 12 Pro வாங்க 14.4 நாட்கள் வேலை செய்ய வேண்டும்.

உலகின் பிரபல ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 14 அன்று சிங்கப்பூர் நேரப்படி 1:30 மணிக்கு, புதிய iPhone 12 Pro மொபைலை வெளியிட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றை கட்டுப்படுத்த தேவையான வசதிகளுக்கு S$804 மில்லியன் செலவு..!

மேலும், இந்த iPhone 12 pro உடன் சார்ஜர் மற்றும் இயர்போன்கள் தரப்படாது, அவை தனியாக விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் ஒரு புதிதாக வேலைக்கு சேர்ந்த பட்டதாரி மாதத்திற்கு S$3,000 முதல் S$2,400 வரை சம்பாதிப்பார்.

இவர் ஒரு புதிய iPhone 12 pro வாங்க 14.4 நாட்கள் வேலை செய்ய வேண்டும், அதாவது உணவு, போக்குவரத்து மற்றும் மற்ற கட்டணங்களை செலுத்துவதற்கு ஒரு சதவிகிதம் கூட செலவிடாமல் இருக்க வேண்டும்.

iPhone 12 Pro-வின் (128 ஜிபி) உள்ளூர் விலைகளுக்கு ஏற்ப பல நாடுகளின் சராசரி மாத சம்பளத்தை ஒப்பிட்டு, போலந்து கூப்பன் ஒருங்கிணைப்பு நிறுவனமான Picodi, சில விறுவிறுப்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.

Photo Credit : Picodi

Picodi-யின் கூற்றுப்படி, ஒரு iPhone 12 pro (128 ஜிபி) வாங்குவதற்கு சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு வெறும் 8.1 நாட்கள் வேலை தேவைப்படுகிறது. ஏனென்றால், மனிதவள அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களிலிருந்து பெறப்பட்ட தரவின்படி, சிங்கப்பூரர்களின் சராசரி மாத சம்பளம் S$5,549ஐக் காட்டுகிறது.

மாதத்திற்கு சராசரியாக S$5,549 சம்பாதிக்கும் ஒரு சிங்கப்பூரர் ஒரு iPhone 12 pro (128 ஜிபி) வாங்குவதற்கு போதுமான பணம் சம்பாதிக்க 8.1 நாட்கள் வேலை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் iPhone குறியீட்டுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரின் முடிவு 2020இல் 0.3 நாட்கள் மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…