சிங்கப்பூரில் 2,800க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் – மனிதவள அமைச்சகம்..!

சிங்கப்பூரில் வேலை தேடும் சிலருக்கு நற்செய்தி: புதிய Work Pass அறிமுகம்
(Photo: MOM/FB)

சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் COVID-19 தொற்றுநோயின் தாக்கம் இருந்தபோதிலும், எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இந்தத் துறையில் 2,800க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இருப்பதாக மனிதவள அமைச்சகம் சமீபத்திய வேலைவாய்ப்பு நிலைமை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இரண்டாவது முறையாக மரண தண்டனையில் இருந்து தப்பிய வெளிநாட்டு ஆடவர்..!

இதில் 130க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏப்ரல் முதல் 2,800க்கும் மேற்பட்ட வேலைகள், பயிற்சி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருவதாக என்றும் குறிப்பிட்டுள்ளது.

இவற்றில், சுமார் 95 சதவீத வேலைகள் நிபுணர்கள், மேலாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கானவை என்றும் மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இதில் பெரும்பான்மையானவை, உற்பத்தி பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மின்னணுவியல் அல்லது இயந்திர பொறியாளர்கள் மற்றும் தொழில்துறை மற்றும் உற்பத்தி பொறியாளர்கள் போன்ற தொழில்நுட்ப வேலைகளும் அடங்கும்.

அதே போல தொழில்நுட்பம் அல்லாத வேலைவாய்ப்புகள், குறிப்பாக முகவர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகிகள் மற்றும் வணிக மேம்பாட்டு மேலாளர்கள் போன்றவையும் அடங்கும்.

இதையும் படிங்க : ஒரே நிமிடத்திற்குள் கிருமித்தொற்றை கண்டறியும் பரிசோதனை முறை – சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…