இரண்டாவது முறையாக மரண தண்டனையில் இருந்து தப்பிய வெளிநாட்டு ஆடவர்..!

(Photo: TODAY)

சிங்கப்பூருக்கு போதைப்பொருட்களைக் கொண்டுவந்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசிய ஆடவர் ஒருவர் நேற்று (அக். 19) இரண்டாவது முறையாக மரண தண்டனையில் இருந்து தப்பினார்.

இதில் 32 வயதான கோபி அவெடியனுக்கு (Gobi Avedian) 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : ஒரே நிமிடத்திற்குள் கிருமித்தொற்றை கண்டறியும் பரிசோதனை முறை – சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

போதைப்பொருள் அடங்கிய மூட்டைகளை கொண்டு வந்தது தனக்குத் தெரியாது என்று நீதிமன்றத்தில் கோபி கூறியுள்ளார்.

அவர் அதனை வேண்டுமென்றே கொண்டுவந்தார் என்று சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள், முந்தைய முடிவை மறுஆய்வு செய்து இரண்டாவது முறையாக மரண தண்டனை ரத்து செய்தனர்.

போதைப்பொருள் கொண்டுவர முயற்சி செய்ததாக அவர் மீதான குற்றச்சாட்டபட்டது. அதனால் அவர் மரண தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் மிகப்பெரிய தங்கும் விடுதி தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிப்பு..!

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலையிடத்தில் மின்சாரம் பாய்ந்து இந்திய ஊழியர் மரணம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…