சிங்கப்பூரில் வேலையிடத்தில் மின்சாரம் பாய்ந்து இந்திய ஊழியர் மரணம்..!

Singapore Indian Worker death
Singapore Indian Worker death (PHOTO: Google Maps)

சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 15) வேலையிடத்தில் மின்சாரம் பாய்ந்து 27 வயதான இந்திய ஊழியர் உயிரிழந்துள்ளார்.

அந்த ஆடவர், 170 ஸ்டில் ரோட்டில் உள்ள மின் நிலையத்தில் வேலையிலிருந்தபோது உயிரிழந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று CNAவின் கேள்விகளுக்கு பதிலளித்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியை மூட உத்தரவு – உணவு விற்பனை நிலையங்களுக்கு அபராதம்..!!

மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில், காவல்துறை தேசிய சேவை நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், 27 வயதான அந்த ஆடவர், மின்சார விநியோகப் பலகையை அகற்றிக் கொண்டிருக்கும் போது அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

பின்னர் அந்த ஊழியர், சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார் என்று MOM குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கோல்டன் வில்லேஜ் திரையரங்கின் அதிரடி சிறப்பு சலுகை.!!

MOM இன் கூற்றுப்படி, உயிரிழந்த அந்த ஆடவர் STIE Pte Ltd நிறுவனத்தைச் சேர்ந்தவர்.

இந்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் விசாரித்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முதலாளிகளுக்கு S$5.5 பில்லியன் உதவி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…