சிங்கப்பூரில் 30 தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு விநியோகம்

migrant workers dorms Hari Raya cheer
(Photo: Hope Initiative Alliance)

அலையன்ஸ் ஆஃப் கெஸ்ட் ஒர்க்கேர்ஸ் அவுட்ரீச் (AGWO)-இன் தன்னார்வலர்கள் தீவு முழுவதும் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு உணவு விநியோகம் செய்தது.

அதில் சுமார் 30 தங்கும் விடுதியில் வசிக்கும் சுமார் 2,600 ஊழியர்களுக்கு பண்டிகை உணவு விநியோகம் செய்யப்பட்டது.

சாங்கி விமான நிலைய நோய் பரவல் குழுமத்தில் புதிதாக 19 பேர் பாதிப்பு

இந்த விநியோகம், சமூக இடைவெளி மற்றும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு ஏற்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

“உணவுகளை விநியோகிப்பதற்கு முன்னர், தேவையான அனுமதி வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு விவரங்களையும் மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) சரியான நேரத்தில் தெரிவிக்க வேண்டியிருந்தது.”

குடும்பத்தை பிரிந்து வாடும் அவர்களுக்கு இது மிகவும் தேவையான உற்சாகத்தைத் தருகிறது என்று நம்புகிறோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம்