இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம்

(Photo by David GRAY / AFP)

சமீபத்தில் வியட்நாமிற்கு பயணம் செய்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் 21 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை அரசாங்க பிரத்யேக வசதிகளில் நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஒரு பகுதி அறைக்கு S$550 மாத வாடகையா? முகநூலில் கேள்வி எழுப்பிய வெளிநாட்டவர்!

முன்னதாக, பயணிகள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை 14 நாட்கள் அரசாங்க பிரத்யேக வசதியிலும், கூடுதலாக ஏழு நாட்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்கியிருக்க முடியும்.

சமீபத்தில் வியட்நாமில் COVID-19 பாதிப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது, இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் MOH செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தற்போது தனிமை உத்தரவை நிறைவேற்றி வரும் நபர்கள், 14 நாள் அவகாசம் நாளை மே 15ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் முடியவில்லை என்றால், மேலும் 7 நாள்களுக்கு அவர்கள் தற்போதைய வசதிகளில் தங்களை தனிமைப்படுத்த வேண்டும்.

செலுத்த வேண்டிய கூடுதல் செலவுகள் குறித்து MOH அவர்களை தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது..

“இந்தியர்களே நாடு திரும்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள்” என கூச்சலிட்டதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு