சிங்கப்பூரில் ஒரு பகுதி அறைக்கு S$550 மாத வாடகையா? முகநூலில் கேள்வி எழுப்பிய வெளிநாட்டவர்!

(Photo: mothership)

பியவன் ஹீத்கண்டீ என்ற மலேசியாவை சேர்த்த 25 வயது மதிக்கத்தக்க ஆடவர் வருகின்ற ஜூலை மாதம் சிங்கப்பூருக்கு வருவதாக முடிவு செய்துள்ளார்.

அதை அடுத்து, இங்கு வசிப்பதற்கு ஒரு சிறு அறையை தேடிக்கொண்டும் அவர் இருந்தார். காதிப் எம்ஆர்டி என்ற இடத்திற்கு அருகாமையில் அறையை தேடியுள்ளார் அவர்.

“இந்தியர்களே நாடு திரும்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள்” என கூச்சலிட்டதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

அந்த ஆடவர், இது தொடர்பாக ஒரு வீட்டு உரிமையாளரை தொடர்பு கொண்டபோது தற்சமயம் அறைகள் எதுவும் காலியாக இல்லை எனவும், அதற்கு பதிலாக குளிர்சாதன வசதி மற்றும் கூடுதலாக சில வசதியுடன் கூடிய சிறு பகுதி இடம் உள்ளது, அதற்கு மாத வாடகையாக S$550 தரும்படி கூறியுள்ளார்.

வீட்டின் புகைப்படத்தை முன்பு அனுப்ப யோசித்த உரிமையாளர், சில மணி நேரங்கள் கழித்து அனுப்பிவைத்தார். அந்த புகைப்படத்தின்படி அந்த இடம், அறையில் ஒரு பகுதி திரைசீலைகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது.

அதனை அடுத்து, அவருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நடந்த உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்த பியவன், உடனே அதனை முகநூல் குழுவில் கடந்த மே 8ஆம் தேதி பதிவேற்றம் செய்தார். குறிப்பிடப்பட்ட வாடகை இந்த இடத்திற்கு சரியானதா என்ற கேள்வியுடன் அவர் பதிவிட்டு இருந்தார்.

இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை…!

சுமார் 2,800 முறைக்கு மேல் பகிரப்பட்ட அந்த பதிவில், பலர் இது உடை மாற்றும் அறை போல் உள்ளது எனவும், உடல் நலம் இல்லாதவர்களை தங்க வைக்கும் அறை என சிலரும், இது குறித்து வீடு மற்றும் மேம்பாட்டு வாரியத்தில் புகார் கொடுக்கும் படி சிலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

வீடு மற்றும் மேம்பட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி, அறைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட வேண்டும், பிரிவுகள் அறைகளாக வாடகைக்கு விட கூடாது.

மேலும், வாடகைக்கு விடுவதற்கு முன் ஆன்லைன் மூலம் வீட்டு உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதே கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில் ஒன்றாகும்.

இந்த தகவல் ஷின் மின் டெய்லி நியூஸ் என்ற ஊடகத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களின் போக்குவரத்து முறைகளில் மாற்றம், கட்டுமான துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அமைச்சர் விளக்கம்