சாங்கி விமான நிலைய நோய் பரவல் குழுமத்தில் புதிதாக 19 பேர் பாதிப்பு

(Photo: TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 13) நிலவரப்படி, 19 புதிய பாதிப்புகளுடன், சாங்கி விமான நிலைய COVID-19 நோய்த்தொற்று குழுமத்தில் மொத்தம் 46 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பாதிப்புகளில், மூன்று பேர் கிளீனர்கள் மற்றும் ஒருவர் துப்புரவு மேற்பார்வையாளர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம்

மேலும், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3-ற்கு பல முறை சென்ற இல்லத்தரசி ஒருவரும் மற்றும் கோஜெக் ஓட்டுநர் ஒருவரும் இதில் அடங்குவர்.

புதிய பாதிப்புகளில், 9 பேர் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரிகின்றனர், அவர்களில் 6 பேர் விமான நிலையத்தில் பணிபுரிந்த துப்புரவாளர்களின் வீட்டு உறுப்பினர்கள் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

எட்டு பேர் இந்தியாவிலிருந்து கண்டறியப்பட்ட B1617 மாறுபாட்டு கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்தியர்களே நாடு திரும்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள்” என கூச்சலிட்டதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு