வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 90 பேர் பாதிப்பு – விடுதிகளில் பாதிப்பு நிலவரம்

(PHOTO: MOM)

சிங்கப்பூரில் நேற்றைய (செப். 19) நிலவரப்படி, சமூக அளவில் 919 பேரும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 90 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 16 கிருமிப்பரவல் குழுமங்களை சுகாதார அமைச்சகம் (MOH) உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

ஊழியர்களுக்குக் கையில் அணிந்துக் கொள்ள பட்டைகள் – பாெருள் வாங்க கட்டணக் கழிவு!

கண்காணிப்பில் உள்ள குழுமங்களில் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளும் அடங்கும். அவை, Blue stars dormitory மற்றும் avery lodge dormitory ஆகியவை ஆகும்.

Blue stars வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நேற்று (செப். 19) ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, இதையும் சேர்த்து மொத்தம் 110 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல, Avery lodge வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நேற்று (செப். 19) 12 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, இதையும் சேர்த்து அங்கு மொத்தம் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உட்லேண்ட்ஸ் கேர் ஹோமில் ஒன்பது புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் MOH கூறியுள்ளது.

தங்குவிடுதிகளுக்கு புதுவித கட்டுப்பாடு: அதிகரிக்கும் செலவுகளால் கவலைப்படும் விடுதி இயக்குநர்கள்