தங்குவிடுதிகளுக்கு புதுவித கட்டுப்பாடு: அதிகரிக்கும் செலவுகளால் கவலைப்படும் விடுதி இயக்குநர்கள்

foreign worker case singapore take action
Pic: Raj Nadarajan/Today

சிங்கப்பூரில் புதிதாக கட்டப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளின் தரத்தை மேம்படுத்தும் விதமாக சிலவற்றை மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் அதிகரிக்கும் செலவுகளைக் கண்டு, தங்குவிடுதி முதலாளிகளும், இயக்குநர்களும் மிகுந்த கவலைப்படுவதாக தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு 1,000- ஐ கடந்தது… அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சில சிறிய தங்குவிடுதிகளில் இதுபோன்ற மாற்றங்கள் செய்வதை சில வெளிநாட்டு ஊழியர் குழுக்கள் ஆதரித்த போதும், இதனால் எந்தவித மேம்பாடும் இருக்காது எனவும் சிலர் கூறுகின்றனர்.

“பிபிடி” என்ற சில காரணங்களுக்காக தங்குவிடுதிகளில் முதல் 2 விடுதிகளின் செலவுகளை அரசு ஏற்றுக்கொண்டாலும், அதனை பராமரிப்பதற்கும், வாடகைக்கு விடவும் ஏற்படும் அதிகமான செலவுகள் விடுதி இயக்குநர்களையே சேரும்.

இதன் காரணமாக 8 தங்கு விடுதிகளை நடத்தும் “சென்டோரியன் கார்ப்பரேஷன்” அதிகரிக்கும் செலவுகளை விடுதியின் முதலாளிகள், இயக்குநர்கள், அரசு மற்றும் நுகர்வாளர்கள் அனைவரும் பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென கூறியது.

செலவுகள் அதிகரித்தாலும் தரம் நிறைந்த தங்குவிடுதிகளுக்கு அதிக தேவை உள்ளது என அதன் தலைமை நிர்வாகி திரு.கோ சி மின் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தங்கு விடுதிகளின் சங்கம், வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகளை தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப விடுதிகளில் மாற்றங்கள் செய்யும்.

இருப்பினும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தங்குவிடுதிகளில், ஒவ்வொரு அறையிலும் கழிப்பறைக் கட்டுவது மிகவும் சவாலாக இருக்கும் என “ஆர்டி குரூப்பின்” இயக்குநரான திரு.யுஜீன் ஆவ் கூறினார்.

சராசரியாக ஒரு கழிப்பறையை கட்ட, கிட்டதட்ட S$ 30,000 செலவாகும். இச்செலவை 20 முதல் 30 அறைகள் வரை ஒப்பிட்டு பார்க்கும் போது, சிறிய விடுதி நடத்துவோருக்கு மிக சிரமமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதிகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவி திட்டங்கள் ஏதேனும் அறிவித்தால் உடனே மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

தமது ஊழியர்களுக்காக அதிக தாெகை செலுத்துவதில், கொரி ஹோட்டிங்ஸ் உடைய தலைமை நிர்வாகி திரு.ஹூய் யூ கோவுக்கு எந்தவித சிரமமும் இல்லை என்றார்.

ஆனால் கட்டண உயர்வும் கட்டுபடியாகமாறு இருக்க வேண்டும் என கூறினார்.

தற்போது அவர் தமது ஊழியர்கள் 170 பேருக்கு மாதம் தலா S$ 350 கட்டணம் செலத்துவதாகவும், அக்கட்டணம் S$ 400 ஆக உயர்ந்தால் எந்தவித சிரமும் இருக்காது என்றார்.

தமிழ் மொழியை வருங்கால தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க அயராது பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!