சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு 1,000- ஐ கடந்தது… அதிர்ச்சியில் பொதுமக்கள்!

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு, மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றி நோய்த் தொற்றில் இருந்து குணமடையும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங், “சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு விரைவில் 1,000- ஐ எட்டக்கூடும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 15 உணவகங்கள் மூடல்; அமைச்சகம் அதிரடி நடவடிக்கை.!

அதன் தொடர்ச்சியாக, சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக நேற்று (18/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (18/09/2021) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, புதிதாக 1,004 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 926 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டனர். வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிப்பவர்கள் 78 பேரும், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நேற்று (19/09/2021) ஒரேநாளில் 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத 90 வயது முதியவர் உயிரிழந்தார்.

தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 863 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 105 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 18 பேர் தீவிரப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிங்கப்பூரில் இதுவரை 76,792 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் 90 வயது முதியவர் உயிரிழப்பு!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்பு 1,037 ஆக இருந்தது. அதன் பிறகு, தற்போது தான் கொரோனா பாதிப்பு 1,000- ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் வெளியே சென்று பொருட்களை வாங்க தயக்கம் காட்டி வருவதாகவும், முடிந்தளவு வீடுகளுக்கு உள்ளேயே இருப்பதாக தகவல் கூறுகின்றன.