COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 15 உணவகங்கள் மூடல்; அமைச்சகம் அதிரடி நடவடிக்கை.!

15 hotels Covid violation
Pic: Urban Redevelopment Authority

COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக 15 உணவகங்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 18 உணவகங்களுக்கும், 36 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களை உணவகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதித்தது, 5 பேருக்கும் மேல் கொண்ட குழுக்களை வளாகத்திள் அனுமதித்தது மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதி செய்ய தவறியது ஆகிய விதிமீறல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக வேகமான அகண்ட அலைவரிசை வேகத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூர்!

Carlsberg Sports பார் கூடத்தில் உபசரிப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்து நேரங்களிலும் செயல்படவில்லை என்பதும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சிங்கப்பூரில் உள்ள இரண்டு இரவு கேளிக்கை கூடங்களின் உணவு, பான வர்த்தக உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் செப்டம்பர் 1ம் தேதி முதல், சுமார் 670க்கும் மேற்பட்ட உணவகங்களில் சோதனை நடத்தியுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று – தங்கும் விடுதியில் 96 பேர் புதிததாக பாதிப்பு