தமிழ் மொழியை வருங்கால தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க அயராது பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

Photo: Education Minister Chan Chun Sing Official Facebook Page

சிங்கப்பூரில் தமிழ் மொழி வழக்கத்தில் இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்புகள், இலக்கியம், தமிழ் பாரம்பரியம் ஆகியவைக் குறித்தக் கருத்தரங்கள், பட்டிமன்றங்கள் இணைய வழி மூலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் வருங்கால தலைமுறையினர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து எளிதாக அறிந்துக் கொள்கின்றன. கடந்த சில நாட்களாக, இத்தகைய கருத்தரங்களில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Toa Payoh Lorong-ல் உள்ள சந்தை மற்றும் ஹாக்கர் மையம் தற்காலிமாக மூடல்.!

அந்த வகையில், 2020, 2021- ஆம் ஆண்டிற்கான ‘நல்லாசிரியர் விருது’ வழங்கும் நிகழ்ச்சி நேற்று (18/09/2021) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் முரசு, தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர்த் தமிழாசியர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங் கலந்துக் கொண்டார்.

மொத்தம் 713 ஆசிரியர்கள் விருதுகளுக்கு முன்மொழியப்பட்டனர். தமிழாசிரியர்களைக் கௌரவிக்கும், இந்த விருதுகள் இதுவரை 200 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களில், தமிழ் மொழியை வருங்கால தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க அயராது பணியாற்றிய ஐந்து ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக் கற்பித்தலுக்குப் பல ஆண்டுகளாக அரும்பங்காற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங் (Minister Of Education Chan Chun Sing), “2020- ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வர்த்தக, வீட்டுச் சூழல்களில் ஆங்கில மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் குறைந்து வரும் தாய்மொழி புழக்கத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

சிமெண்ட் லாரியில் சிக்கிய 37 வயது ஆடவர் மரணம்

வகுப்பறைக்கு அப்பால் வீடுகளில் குறைந்து வரும் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க கல்வித்துறை அமைச்சகமும், இதர அமைப்புகளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. கல்வித்துறை அமைச்சகம், தமிழ் மொழி விருப்பப் பாடத் திட்டத்தை அறிமுகம் செய்து, தமிழ் இலக்கியம் பற்றிய வெளிநாட்டுப் பயணங்கள், உள்ளூர் முகாம்கள் உள்ளிட்ட புத்தாக்க முறைகள் மூலம் கற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.