சாங்கி ஈஸ்ட் பணித்தளத்தில் விபத்து: ரோலர் இயந்திரம் கவிழ்ந்ததில் இந்திய ஊழியர் மரணம்

lightning strike 3 construction workers hospital
Pic: Getty Images

சாங்கி ஈஸ்ட் திட்டத்திற்கான பணித்தளத்தில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று நடந்த விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

சாங்கி விமான நிலைய முனையம் 5 (T5) மற்றும் விமான நிலையத்திற்கான மூன்றாவது ஓடுபாதை பணியை உள்ளடக்கியது அந்த பணித்தளம்.

சக கட்டுமான ஊழியரின் விரல் பகுதியை கடித்து துப்பிய வெளிநாட்டு ஊழியர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

இந்த மோசமான விபத்து தானா மேரா கோஸ்ட் ரோட்டில் நடந்துள்ளது, மேலும் அன்று இரவு 8.05 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஊழியர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மண்ணை சமமாக்க பயன்படும் உருளை இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது, ​​இயந்திரம் கவிழ்ந்ததில் அவர் சிக்கிக்கொண்டார்.

43 வயதான அவர் INA Heavy Machinery and Equipment நிறுவனத்தில் பணிபுரிந்தார், அந்த உருளை இயந்திரம் சுமார் 10 டன் எடையுள்ளதாக நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்த ஊழியர், அங்கு இறந்தார்.

இயந்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட ஊழியரை, சக ஊழியர்கள் வெளியே மீட்டு எடுத்தனர் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (ST) புரிந்துகொள்கிறது.

இந்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் நடந்த விபத்துடன் சேர்த்து, இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 34 பணியிட இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 2020இல் 30 இறப்புகள் மற்றும் 2019இல் 39 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்திய விமானங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!!