சிங்கப்பூர் DBS வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

(Photo: DBS)

DBS வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய SMSகளை மட்டுமே அனுப்பும் என்று தெரிவித்துள்ளது.

இது இன்று ஜனவரி 21, வெள்ளிக்கிழமை முதல், மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆற்றில் சடலமாக மிதந்த மலேசிய இளம்பெண்: மகளை கடைசியாக பார்க்க சிங்கப்பூர் வர முடியாமல் தவிக்கும் பெற்றோர்

இதில், பாதுகாப்பு மற்றும் வர்த்தக அறிவிப்புகள், கிளிக் செய்யக்கூடிய இணைப்புகள் இல்லாத OTP அங்கீகார SMSகள் ஆகியவை அடங்கும்.

மேலும், ‘அத்தியாவசியமற்ற’ குறுஞ்செய்திகள் அனுப்புவதை வங்கி நிறுத்தும் என்றும் அது கூறியுள்ளது.

வங்கியின் டிஜிட்டல் சேவைகளின் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) மற்றும் சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம் (ABS) அறிவித்த புதிய நடவடிக்கைகளுக்கு DBS வங்கி தனது ஆதரவை தெரிவித்தது.

சிங்கப்பூரில் வேலையிடத்தில் தவறி விழுந்த ஊழியர் மரணம்!