பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது மற்றவர்களுக்கு உதவிய எட்டு பயணிகளுக்கு விருதுகள் இன்று சனிக்கிழமை (நவம்பர் 5) வழங்கப்பட்டது.
2019ல் தொடங்கப்பட்ட “அக்கறையுள்ள பயணிகள் விருது” (Caring Commuter Award) தற்போது நான்காவது பதிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
“சாலை விதிகளை பின்பற்றுங்க.. உங்களுக்கும் குடும்பம் இருக்கு”… ஊழியரின் பொறுப்பில்லா செயல்
பயணிகளுக்கு அதிக விழிப்புணர்வை உருவாக்குவதையும், அக்கறை நடத்தையுள்ள சமூகத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாக இது கொண்டுள்ளது.
இதில் Toa Payoh HDB ஹப் ஏட்ரியத்தில் ஆறு பயணிகளுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது.
சரிந்து விழுந்த ஒருவரின் உயிரை காப்பாற்றியதற்காக இருவருக்கு “சிறந்த அக்கறையுள்ள பயணிக்கான ரிச்சர்ட் மேக்னஸ் விருது” வழங்கப்பட்டது.
“சாவி இருந்துச்சு தட்டிட்டு போய்ட்டேன்” – கார், பேருந்தை ஓட்டிச்சென்று மாட்டிய திருடன்