“சாலை விதிகளை பின்பற்றுங்க.. உங்களுக்கும் குடும்பம் இருக்கு”… ஊழியரின் பொறுப்பில்லா செயல்

Food delivery rider nearly hit by carpark gantry arm in Yishun
Stomp

சிங்கப்பூர்: பிளாக் 661 யுஷுன் அவென்யூ 4 அருகே கார்பார்க் தடுப்பு மோதி கிட்டத்தட்ட சைக்கிள் ஓட்டுநர் விபத்தில் சிக்கப்பார்த்தார்.

வியாழக்கிழமை (நவம்பர் 3) காலை 11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், அவர் ஃபுட்பாண்டா சட்டை அணிந்திருப்பதை காணலாம்.

“சாவி இருந்துச்சு தட்டிட்டு போய்ட்டேன்” – கார், பேருந்தை ஓட்டிச்சென்று மாட்டிய திருடன்

சைக்கிளில் கிராப்ஃபுட் ஸ்டோரேஜ் பையை வைத்திருந்த சைக்கிள் ஓட்டுநர், கேன்ட்ரி தடுப்பை தவிர்க்கத் தலையைக் குனிந்து அதில் சென்றதையும் காணலாம்.

நல்லவேளையாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது “மிகவும் வேடிக்கையானது” என்று கூறிய நிருபர் ஒருவர், ஆனால் “சிலர் தங்கள் சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை” என்றும் குறிப்பிட்டார்.

நினைவில் கொள்ளுங்கள், முதலில் உங்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம், உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது.

சிங்கப்பூரிலும் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய எலோன் மஸ்க் – தொடரும் வேட்டை