சிங்கப்பூரிலும் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய எலோன் மஸ்க் – தொடரும் வேட்டை

சிங்கப்பூரிலும் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய எலோன் மஸ்க் - தொடரும் வேட்டை
Joshua Hoehne on Unsplash

எலோன் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கியதை அடுத்து பல்வேறு அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்கம் செய்துவருகிறார்.

அதில் சிங்கப்பூரின் ட்விட்டர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களையும் அவர் நீக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிகரெட்டு கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு ஓட்டுநர் கைது

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி; பொறியியல், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழு ஆகிய பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இன்று நவம்பர் 5 சனிக்கிழமை, சிங்கப்பூரில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் குறித்த அதிகாரப்பூர்வச் செய்திகள் வெளியாகின.

இதுவரை எத்தனை சிங்கப்பூர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 7,500 ட்விட்டர் வேலைகளில் 3,700 வேலைகளை எலோன் மஸ்க் குறைப்பதாக கூறப்படுகிறது.

இதில் CEO பராக் அகர்வால், CFONed Segal மற்றும் மூத்த நிர்வாகிகள் விஜயா காடே மற்றும் சீன் எட்ஜெட் ஆகியோரும் வேலையில் இருந்து தூக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உணவு விநியோக ஓட்டுனர்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? – S$5,000 வரை சம்பளம்