சிகரெட்டு கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு ஓட்டுநர் கைது

2-vans-duty-unpaid-cigarettes-sembawang
Singapore Customs

சிங்கப்பூர்: வரி செலுத்தப்படாத சிகரெட்டு கடத்தலில் தொடர்புடைய 31 வயது மலேசிய ஆடவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (நவ.3) அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், மொத்தம் 3,644 அட்டைப்பெட்டிகள் மற்றும் வரி செலுத்தப்படாத 80 சிகரெட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

உணவு விநியோக ஓட்டுனர்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? – S$5,000 வரை சம்பளம்

செம்பவாங் கிரசென்ட் அருகே சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஒரு வேனில் சோதனையிட்டதில் 1,112 அட்டைப்பெட்டிகள் மற்றும் 80 வரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். பின்னர் அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர்.

இந்த விசாரணையில் அருகிலுள்ள அடுக்குமாடி கார்பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வேன் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் மேலும் 2,532 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

இதில் வரி கட்டாமல் ஏய்ப்பு செய்யப்பட்ட GST தொகை முறையே S$369,260 மற்றும் S$28,650 என சொல்லப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

இருவகை திறன் கொண்ட தடுப்பூசி: 18 முதல் 49 வயதினருக்கு… நவ.7 முதல் – ரெடியா இருங்க