உணவு விநியோக ஓட்டுனர்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? – S$5,000 வரை சம்பளம்

Joshua Lee & Zheng Zhangxin

Singapore: உணவு விநியோக ஓட்டுனர்களில் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே மாதத்திற்கு S$5,000 க்கு மேல் சம்பாதிப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஆனால் அதிகம் சம்பாதிக்கும் இந்த ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கின்றனர் என்றும், அதனால் விபத்துகளில் சிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிசி ஸ்டடீஸ் (IPS) நடத்திய ஆய்வில் இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.

இருவகை திறன் கொண்ட தடுப்பூசி: 18 முதல் 49 வயதினருக்கு… நவ.7 முதல் – ரெடியா இருங்க

1,002 பிளாட்ஃபார்ம் விநியோக ஓட்டுனர்கள், அதாவது 33.9 சதவீத ஊழியர்கள் S$1,000 முதல் S$1,999 வரை சம்பாதிக்கின்றனர்.

IPS நடத்திய இந்த கணக்கெடுப்பில் 21 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட பெரும்பாலான ஆண்கள் பதிலளித்தனர்.

IPS ஆய்வு

  • 23.6 சதவீத ஓட்டுனர்கள் மாதத்திற்கு S$1,000க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்
  • 33.9 சதவீதம் பேர் S$1,000 மற்றும் S$1,999 வரை சம்பாதிக்கிறார்கள்
  • 13 சதவீதம் பேர் S$2,000 முதல் $2,999 வரை சம்பாதிக்கிறார்கள்
  • 29.5 சதவீதம் பேர் S$3,000 மற்றும் அதற்கு மேலே சம்பாதிக்கிறார்கள்
  • 3.2 சதவீத ஓட்டுனர்கள் மட்டுமே மாதம் குறைந்தது S$5,000 சம்பாதிக்கிறார்கள்

சிங்கப்பூரில் இலவச ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவிகள் – நவ.21 முதல் வழங்கப்படும்