மலேசிய பியானோ கலைஞரும் பிரபலமானவருமான கேத்ரின் லி (Cathryn Li) பலரால் பொறாமைப்படும் அளவிற்கு மெல்லிய உடலமைப்புடன் தன் தோற்றத்தை மெருகேற்றியுள்ளார்.
ஆனால் அது அவரின் கடின உழைப்புக்கும் உறுதியான மன நிலைக்கும் கிடைத்த பரிசாக தான் நம்மால் பார்க்க முடிகிறது.
தெம்பனீஸில் போலீஸ் அதிரடி சோதனை – பெண் ஒருவர் கைது
மலேசியாவின் ‘piano goddess’ என்றும் அழைக்கப்படும் 33 வயதான அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது கடின உழைப்பு, மேலும் உணவு முறை எப்படி இருந்தது என்பதை குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராம் பதிவில் வெளிப்படுத்தினார்.
அவர் சாப்பிட்டு வந்த உணவுகளின் புகைப்படங்களைப் பகிந்து, “நான் வழக்கமாக சாப்பிடுவது என்ன? ஐந்து வருடங்கள் மேற்கொண்ட விடாமுயற்சி இனி அன்றாட வழக்கமாக மாறிவிட்டது” என்று கூறியுள்ளார்.
33 வயதில் மெல்லிய உடலமைப்பில் இருக்கும் அவரை காணும் பலருக்கு பொறாமை ஏற்படாமல் இருக்காது.
நாமும் கடும் முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.