சிங்கப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு வூஹான் வைரஸ்…!

Singapore confirms 2 more Wuhan virus cases, bringing total to 3 infected (PHOTO: SINGAPORE GENERAL HOSPITAL)

சிங்கப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு வூஹான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் மொத்தம் மூன்று பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) தெரிவித்துள்ளது.

முதலில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் வூஹானைச் சேர்ந்த 66 வயதான நபர், இவர் சிங்கப்பூருக்கு விடுமுறைக்கு வந்தவர். அவர் தற்போது சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (எஸ்ஜிஹெச்) தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; “அமைதியாகவும் ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும்” – பிரதமர் லீ…!

பின்னர், அவருடன் பயணம் செய்த அவரது 37 வயது மகனுக்கும் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், மற்றொரு சீனா வூஹானைச் சேர்ந்த 53 வயது பெண்ணுக்கும் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது நிலை சீராக உள்ளது.

இதையும் படிங்க : உலகளவில் ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர்..!

இதில், 1 முதல் 78 வயது வரையில், மொத்தம் 44 சந்தேகத்திற்கிடமான நபர்கள் உள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 44 பேரில், 13 நோயாளிகள் வூஹான் வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதனை பெற்றுள்ளனர்.

இதில் மூன்று பேருக்கு மட்டும் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.