பேருந்து, கனரக டிரெய்லர் சம்பந்தப்பட்ட விபத்து; கார் ஓட்டுநர் காயம்..!

Accident in Singapore
Car driver taken to hospital after accident involving bus, trailer (Photo: Ng Eng Heng)

உட்லேண்ட்ஸ் சாலையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) காலை நடந்த விபத்தில் சிக்கிய 48 வயது நபர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதில் அந்த நபரின் கார், பேருந்து மற்றும் கனரக டிரெய்லர் வாகனம் ஆகியவை விபத்தில் சிக்கியதாக CNA செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிக பணத்தொகையை அறிவிக்கத் தவறிய பெண்ணுக்கு $6,000 அபராதம்..!

அதன் பிறகு இந்த விபத்து குறித்து காலை 8 மணியளவில் போலீசார் எச்சரிக்கப்பட்டனர்.

பின்னர், இங் டெங் ஃபாங் (Ng Teng Fong) பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, விபத்தில் சிக்கிய கார் ஓட்டுநருக்கு சுயநினைவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான புகைப்படம் ஒன்றில் டிரெய்லருக்கு அருகில் சாலையின் நடுவில் கவிழ்ந்த காரையும் காணமுடிகிறது. காரின் முன்புறம் மோசமாக நொறுங்கிய நிலையில் காணப்படுகிறது.

அதை தொடர்ந்து இந்த விபத்து குறித்து வாகன ஓட்டிகளை காலை 8.50 மணியளவில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) எச்சரித்தது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் 3 புதிய நபர்கள் உறுதி – மொத்தம் 84 சம்பவங்கள் பதிவு..!

மேலும் 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ட்வீட்டில், டர்ஃப் கிளப் அவென்யூ வரை நெரிசல் இருப்பதாகக் கூறியது, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு ட்வீட்டில் இடது பாதையைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை எச்சரித்தது.

போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.