சிங்கப்பூரில் அதிக பணத்தொகையை அறிவிக்கத் தவறிய பெண்ணுக்கு $6,000 அபராதம்..!

Woman fined $6,000 for failing to declare
Woman fined $6,000 for failing to declare more than $135,000 in cash while leaving Singapore

62 வயதான பெண் ஒருவர் சுமார் 135,000 டாலருக்கும் அதிகமான பணத்தொகையை சிங்கப்பூரை விட்டு வெளியே எடுத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி அறிவிக்கத் தவறியதற்காக 6,000 டாலர் அபராதம் அந்த பெண்ணுக்கு நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 19) விதிக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலைய முனையம் ஒன்றில் 20,000 டாலருக்கும் அதிகமாக பணத்தை பெண் ஒருவர் எடுத்துச் சென்றதாக கடந்த மார்ச் 9ஆம் தேதி எச்சரிக்கை செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் 3 புதிய நபர்கள் உறுதி – மொத்தம் 84 சம்பவங்கள் பதிவு..!

இது தொடர்பான விசாரணையில், மேடம் கிம் குவாங் ஹை என்ற பெண், சிங்கப்பூரை விட்டு வெளியே செல்ல முயன்றபோது 135,000 டாலர்க்கு அதிகமான மதிப்புள்ள ஆஸ்திரேலிய நாணயத்தை வைத்திருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பணம் கொண்டு செல்வது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் மீது ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும் அபராதமாக 6,000 டாலர் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை அறிவோம்

20,000 டாலருக்கும் அதிகமான பணத்தையோ அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு பணத்தையோ, சிங்கப்பூருக்குள் அல்லது வெளியே கொண்டு செல்ல சட்டப்பூர்வமான அறிவிப்பு தேவை என்ற நினைவூட்டலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் அது ஒரு குற்றமாக கருதப்படும். இந்த குற்றத்திற்கு $50,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

Source : Straits Times

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை..!