லிட்டில் இந்தியாவில் தீபாவளி விற்பனை மந்தம்; கூட்டம் அதிகம் இல்லை – கடைக்காரர்கள் கவலை

little india illegally working 47 people investigated

சிங்கப்பூரில் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தீபாவளி நெருங்கிவிட்டது, இருப்பினும் லிட்டில் இந்தியாவிலுள்ள கடைகளில் இந்த காலகட்டத்தின் பண்டிகை விற்பனை என்பது மந்தமாகவே உள்ளது என்று கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மக்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று சிஎன்ஏ-விடம் பேசிய கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

Work permit அனுமதி பெற்ற இந்திய ஊழியருக்கு ஒன்பது வார சிறைத்தண்டனை

சிங்கப்பூரின் கோவிட்-19 கட்டுப்பாடுகள் முதலில் அக்டோபர் 24 வரை நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 வரை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விதிகளின்கீழ், சமூகக் ஒன்றுகூடல் ஒரு குழுவிற்கு இருவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

அலிசா மஹால் என்ற பிராண்டின் கீழ் பண்டிகைக் தின்பண்டங்களை விற்கும் திருமதி கதீஜா என்பவர் இதுபற்றி கூறுகையில்; குறைந்த கூட்டம் வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் கடைசி முறை, முழு குடும்பமும் பொருட்கள் வாங்க வருவார்கள். ஆனால், இப்போது ஒருவர் மட்டுமே வருகிறார். இதன் வித்தியாசத்தை நீங்கள் காணலாம், என்றார்.

கடை விற்பனை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 30 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கூறுகிறார் அவர்.

“முதலில், பொதுமக்கள் வெளியே செல்ல பயப்படுகிறார்கள். நிறைய பேர் தங்களுடைய வேலையில் இல்லாததால் பணம் ஒரு பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “பண்டிகை உற்சாக மனநிலை அனைவரிடத்திலும் உள்ளது, ஆனால் குறைந்த பட்ஜெட் மற்றும் கிருமித்தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதால், அனைவரும் கவலையில் உள்ளனர்.”

போக்குவரத்து காவலரை மோதிவிட்டு தப்பிய இருவர் கைது – (காணொளி)