Work permit அனுமதி பெற்ற இந்திய ஊழியருக்கு ஒன்பது வார சிறைத்தண்டனை

(Photo: TODAY)

வயது வந்தோர் பராமரிப்பு இல்லத்தில் குடியிருப்பாளர் ஒருவர் அங்குள்ள ஊழியரின் காலரைப் பிடித்து இழுத்தார், இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் 36 வயதான அந்த நபரைத் தாக்கினார்.

இந்திய நாட்டை சேர்ந்த 28 வயதான பராமரிப்பு ஊழியர், கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி குடியிருப்பாளரை இரண்டு முறை தாக்கினார், ஒரு சம்பவத்தில் அவரை தரையில் இழுத்துச் சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவலரை மோதிவிட்டு தப்பிய இருவர் கைது – (காணொளி)

குடியிருப்பாளருக்கு மன இறுக்கம், லேசான அறிவுசார் குறைபாடு மற்றும் கால்-கை வலிப்பு ஆகிய பிரச்சனைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தானே முன்வந்து காயம் ஏற்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய நாட்டவருக்கு நேற்று நேற்று (அக். 28) வியாழக்கிழமை, ஒன்பது வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை வழங்குவதற்கு முன், நீதிபதி ஜான் எங் கூறியதாவது; அந்த வேலையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறிப்பிட்டார்.

work permit அனுமதி பெற்ற ஊழியரிடம் உரையாற்றிய நீதிபதி; “உங்களைப் போன்றவர்கள் செய்யும் வேலை எளிதானது அல்ல, இது மிகவும் கடினமான சூழ்நிலை என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், அத்தகைய செயலை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது” என்றார்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் உத்தரவு இருப்பதால், குற்றவாளி, பாதிக்கப்பட்டவர் மற்றும் அந்த பராமரிப்பு இல்லத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

அந்த பராமரிப்பு ஊழியர் 2019 முதல் பாதிக்கப்பட்டவரை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ள நிறுவனங்கள் – கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மகிழ்ச்சி