DBS வங்கி சேவை தடங்கல்: “வங்கி மீண்டும் சிறப்பாகச் செயல்படும்” – CEO

(Photo: IE)

சிங்கப்பூரில் ஒரு வாரத்திற்கு முன்பு DBS வங்கியின் டிஜிட்டல் சேவையில் தடங்கல் ஏற்பட்டது, இது ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்காக தனது வாடிக்கையாளர்களிடம் DBS வங்கியின் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

“பிரார்த்தனைகளை காரில் கேட்க கூடாது” என இஸ்லாமிய பயணியிடம் கூறிய ஓட்டுநர் இடைநீக்கம்

கடந்த டிசம்பர் 3, வெள்ளிக்கிழமையன்று Reuters கூட்டத்தில் பேசிய அவர், “வாடிக்கையாளர்களுக்கு எங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க உரிமை உண்டு, அவர்களின் விரக்தியையும் வேதனையையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில், சமீபத்தில் ஏற்பட்ட மோசமான தடங்களை தொடர்ந்து, வங்கி அதன் செயல்முறைகளை முழு மறுஆய்வு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

வாடிக்கையாளர்கள் குறைந்தது இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து பணம் செலுத்த முடியாமல் போனது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

அதிக டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வங்கிகள் முன்னேறுவதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் அதற்கேற்ப அதிகரிக்கும் என்று குப்தா கூறினார்.

வங்கி மீண்டும் சிறப்பாகச் செயல்படுவதற்கான வழிகளைக் கொண்டு வரும் என்றும் கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி வந்தவர்களுக்கு தொற்று உறுதி – தொற்று ஆபத்து நாடு என்பதால் தீவிர சோதனை