“பிரார்த்தனைகளை காரில் கேட்க கூடாது” என இஸ்லாமிய பயணியிடம் கூறிய ஓட்டுநர் இடைநீக்கம்

Ryde/Facebook and Wake Up Singapore/Facebook

சிங்கப்பூரில், வாடகை சவாரி நிறுவனமான Ryde, தனது ஓட்டுநர் ஒருவரை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது.

ஏனெனில், தனது காரில் மத பிரார்த்தனைகளை கேட்க கூடாது என்று முஸ்லீம் பெண் பயணியிடம் அவர் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்டிற்கு, “கார்டன்ஸ் பை தி பே” திறப்பு – முதல் நாளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

ஆனால், அந்த நேரத்தில் தான் அவ்வாறு செய்யவில்லை என்று அந்த பெண் பயணி கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 3 அன்று தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த இடைநீக்கம் குறித்த அறிவிப்பை Ryde வெளியிட்டுள்ளது.

Ryde ஓட்டுனருடனான தனது கசப்பான அனுபவத்தை விவரிக்கும் பயணியின் ஸ்க்ரீன்ஷாட்ஸ்களை, “Wake Up singapore” ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டது.

பயணியின் கூற்றுப்படி, அவர் வாகனத்தில் ஏறியபோது ஓட்டுநர் சில சைகைகளைச் செய்து தனது earbudsஐ காதில் வைத்ததாக கூறியுள்ளார்.

பிரார்த்தனையைக் கேட்டால் காரில் எனர்ஜி மாறிவிடும் என்று ஓட்டுநர் கூறியதாகவும், இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் பயணி கூறினார்.

இந்த நிலையில் அசௌகரியமாக உணர்ந்த பயணி, ஓட்டுநர் ஒரு இனவெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்பாளர் என்பதை உணர்ந்து தன்னை இறக்கிவிடுமாறு கோரினார்.

இதனை அடுத்து, டிச. 3 அன்று அறிக்கையை வெளியிட்ட Ryde, அந்தச் சம்பவத்தால் புண்பட்ட பயணிக்கும் மற்றும் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

மேலும், ஓட்டுநர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி வந்தவர்களுக்கு தொற்று உறுதி – தொற்று ஆபத்து நாடு என்பதால் தீவிர சோதனை