வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் வாடகை தொடர்ந்து ஏற்றம்!

Photo: Housing And Development Board

ரியல் எஸ்டேட் போர்டல் ‘SRX’- ன் ஃப்ளாஷ் தரவுகளின்படி (Flash Data From Real Estate Portal SRX), “ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் தனியார் குடியிருப்புகளுக்கான வாடகைகள் ஒரே மாதிரியாக இருந்தன. அதே நேரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்புகளின் (Housing And Development Board- ‘HDB’) வாடகை தொடர்ந்து ஏறுமுகத்திலே உள்ளது.

ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் அதிக கூட்டுரிமை வீடுகள் (Condominium units) மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி வீடுகள் (HDB Flats) குத்தகைக்கு விடப்பட்டன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கூட்டுரிமை வீடுகளின் வாடகை தொடர்ந்து ஆறு மாதங்கள் உயர்ந்து கடந்த மாதம் மாறாமல் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து வாடகை 7.6 சதவிகிதம் உயர்ந்தது. இருப்பினும் அவை கடந்த 2013- ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரத்தைக் காட்டிலும், இது கிட்டத்தட்ட 10.9 சதவிகிதம் குறைவாகும்.

சிங்கப்பூரில் கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

மறுபுறம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி வீடுகளுக்கான வாடகை கடந்த மாதம் தொடர்ந்து 13 வது மாதமாக உயர்ந்தது. இது ஜூன் மாதத்தை விட 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இவை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட 8.4 சதவிகிதம் அதிகமாக இருந்தபோதிலும், அவை கடந்த 2013- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சத்திலிருந்து 7.7 சதவிகிதமாக இருந்தன.

கடந்த மாதம், அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் (All HDB Flat Types) உள்ள அனைத்து வீடுகளின் வகைகளுக்கும் வாடகை உயர்ந்தது. குறிப்பாக, முதிர்ச்சியற்ற பேட்டைகளில் (Non-Mature Estates) உள்ள வீடுகளின் வாடகை 1.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் முதிர்ந்த பேட்டைகளில் (Mature Estates) உள்ள வீடுகளின் வாடகை 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது.!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆரஞ்சுடீ & டையின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டின் சன் (Christine Sun, senior vice-president of research and analytics at real estate firm OrangeTee & Tie) கூறுகையில், “தனியார் மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை சந்தைகளில் வலுவான தேவை, அதிகமான உள்ளூர் குத்தகை வீடுகளை தற்காலிகமாக தங்கள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை குடியிருப்புகள் அல்லது தனியார் கூட்டுரிமை வீடுகளை விற்றதற்கு காரணமாக இருக்கலாம்.

சில சிங்கப்பூரர்கள் தங்கள் புதிய வீடுகளைக் கட்டி முடிப்பதற்காகக் காத்திருக்கக் கூடும். மேலும், கோவிட் -19 காரணமாக கட்டுமானப் பணிகளில் தாமதங்களைச் சந்திக்க நேரிடும்” என்றார்.