சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது.!

Customs seized illegal liqour
Pic: Singapore Customs

சிங்கப்பூரில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுமார் 670-க்கும் மேற்பட்ட பாட்டில்கள், 30 ஜெர்ரி கேன்கள் (jerry cans) மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட இரண்டு மதுபாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் வளாகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சட்டவிரோத நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, Bedok நார்த் ஸ்ட்ரீட் 2-ல் உள்ள கார் பார்க்கிங்கில் நின்ற கார் ஒன்றை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அந்த கார் ஓட்டுநரான சீன நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அதிகாரிகள் Woodlands East தொழிற்பேட்டையிலும் சோதனை நடத்தினர்.

அங்கு, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மற்றொரு சீன நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன பெண்கள்… வசிப்பிடம் கொடுத்தவருக்கு சிறை!