சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன பெண்கள்… வசிப்பிடம் கொடுத்தவருக்கு சிறை!

Photo: Singapore Immigration & Checkpoints Authority

 

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் ஷு யீஷுயென் (Xu Yixuan). இவர் கடந்த 2019- ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு தெம்பனிஸில் உள்ள வீடு ஒன்றில் தங்குவதற்கு அனுமதி தந்துள்ளார். இந்த இரண்டு பெண்களும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4- ஆம் தேதி அன்று காவல்துறையுடன் இணைந்து குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (Immigration and Checkpoints Authority) அதிகாரிகள் அந்த வீட்டை தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, இரு பெண்களும் பிடிபட்டனர். இது குறித்து ஷுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அவர் கடந்த 2019- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்னர் அந்த நபர், பெண்களிடம் தகுந்த குடிநுழைவு அனுமதி உள்ளதா என்பதை உறுதி செய்யத் தவறிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றன.

2022க்கான கல்வி ஆண்டின் வேலை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன பெண்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கி அடைக்கலம் கொடுத்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில், ஆவணம் எதுவும் சார்பார்க்காமல் பெண்களுக்கு வாடகைக்கு வீட்டுவிட்ட நபருக்கு 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த இரண்டு சீன பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (Immigration and Checkpoints Authority) கூறுகையில், “வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் அசல் குடிநுழைவு அல்லது வேலை அனுமதியை சரிபார்க்க வேண்டும். அசல் கடவுச் சீட்டில் உள்ள அவர்களுடைய விவரங்களைக் குடிநுழைவு அல்லது வேலை அனுமதியுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். வேலை அனுமதிகளை மனிதவள அமைச்சகத்துடனும், மாணவர் அனுமதிச் சீட்டு போன்ற குடிநுழைவு அனுமதிகளை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமான ஐ.சி.ஏ.யுடனும் சரிபார்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.

சென்றுகொண்டிருந்த வாகனத்தில் இருந்து பறந்து மற்றொரு வாகனத்தை தாக்கிய உதிரி டயர்

சட்டவிரோதமாக இங்கு இருப்பவர்களுக்கு வசிப்பிடம் அளிக்கும் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 6,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.