1.295 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விற்பனையான பிஷன் வீவக வீடு!

Photo: Google Maps and via Property Guru

 

பிளாக் 273 A பிஷன் ஸ்ட்ரீட் 24- ல் (Block 273A Bishan Street 24) உள்ள 120 சதுர மீட்டர் (120 sq m unit) பரப்பளவுக் கொண்ட இந்த ஐந்து அறை வீடு, டிபிஎஸ்எஸ் (Design, Build and Sell Scheme- ‘DBSS’) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. மொத்தம் 40 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் பெயர் நேச்சுரா லாஃப்ட் (Natura Loft) ஆகும். விற்பனைக்கு வந்த மூன்று வாரங்களுக்குள் இந்த வீடு 1.295 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. இந்த பரிவர்த்தனையைக் கையாண்டது ஈஆர்ஏ நிறுவனம் ஆகும். வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் (Housing & Development Board- ‘HDB’) மூலம் விற்பனை செய்யப்பட்ட வீடுகளில், இதுவே மிக அதிக விலைக்கு விற்பனையான வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் வீடு என்ற சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், வாம்போவாவில் (Whampoa) உள்ள 49 ஆண்டுகள் பழமையான வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் வீடு 1.268 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே ஆக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீடாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் 426 வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீடுகள் 1 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அல்லது அதற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த 2 வீவக பிளாக்குகளில் வசிப்போருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை!

கடந்த ஜூலை 30- ஆம் தேதி நிலவரப்படி, 124 வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீடுகள் (HDB Resale Flats) இந்த ஆண்டு குறைந்தது 1 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மில்லியன் டாலர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீடு பரிவர்த்தனைகள் இந்த ஆண்டு சாதனை உயர்வில் முடிவடையும். இது கடந்த மூன்று ஆண்டுகளில் காலாண்டு சராசரி 25 யூனிட்டுகளாக இருந்த நிலையில், 180 யூனிட்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று ஒரு ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, சீனாவின் ஜியாங்சுவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

ஆரஞ்சுடீ & டை நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டின் சன் (Christine Sun, senior vice-president of research and analytics at OrangeTee & Tie) கூறுகையில், “சமீபத்திய பரிவர்த்தனை வரவிருக்கும் காலங்களில் 1.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் முதல் 1.3 மில்லியன் சிங்கப்பூர் டாலர் வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் மறுவிற்பனை ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்” என்றார்.