ஆஸ்திரேலியா, சீனாவின் ஜியாங்சுவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

Photo: Changi Airport

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health) முடுக்கிவிட்டுள்ளது. மேலும், அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத பொதுமக்கள், உணவகங்கள், பானக் கடைகள் உள்ளிட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கொரோனா தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்திக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதியவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய தேவையில்லை; வீடுகளை விட்டு வெளியே வர இயலாத முதியவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் விரைவில் அமையவிருக்கும் 2 புதிய இயற்கை பாதைகள்.!

சிங்கப்பூரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்றுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா(Australia), சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் (China’s Jiangsu) இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் சிங்கப்பூருக்கு பயணிகள் 14 நாட்கள் அரசு ஏற்பாடு செய்த இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் (Stay-Home-Notice) கொள்ள வேண்டும். மேலும், அரசின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆஸ்திரேலியாவிற்கு கடந்த 21 நாட்களில் பயணம் செய்த பயணிகளுக்கும் இது பொருந்தும். ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததே இதற்கு காரணம்.

பயணிகள் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு (மூன்று நாட்கள்) முன்னர் கொரோனா பிசிஆர் (COVID-19 PCR Test) மருத்துவ பரிசோதனையைச் செய்திருக்க வேண்டும். அந்த பரிசோதனை முடிவில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்ற ‘நெகட்டிவ்’ சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவர்; கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள், மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளாமல் வருபவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.

ஜூரோங் வெஸ்ட்டில் சண்டையிட்டுக்கொண்ட 2 பெண்கள் கைது – (காணொளி)

நிரந்தர குடியிருப்பாளர்கள் (Permanent Residents) மற்றும் நீண்ட காலம் பாஸ் (Long-Term Pass Holders) வைத்திருப்பவர்கள் இந்த புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தவறினால் அவர்களின் அனுமதி (Permit) அல்லது பாஸ் (Pass) ரத்துச் செய்யப்படலாம்.

அதேபோல் ,சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்கள் வீடுகளில் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைக் காலம் முடிவதற்குள் அவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையை எடுக்க வேண்டும். ஜியாங்சு மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததே இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணம். இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் 2- ஆம் தேதி அன்று இரவு 11.59 PM மணியில் இருந்து அமலுக்கு வருகின்றன”. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health) தெரிவித்துள்ளது.