சிங்கப்பூரில் விரைவில் அமையவிருக்கும் 2 புதிய இயற்கை பாதைகள்.!

Singapore Clementi Nature Trail
Pic: National Parks Board

சிங்கப்பூரின் கிளமெண்டி வட்டாரத்தில் இரண்டு புதிய இயற்கை பாதைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளது, பூங்கா இணைப்புக் கட்டமைப்பின்கீழ், தற்பொழுது பயன்பாட்டில் உள்ள அத்தகைய பூங்காக்களுடன் அவை ஒன்றிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளமெண்டி வட்டாரத்தில் அமைக்கப்பட உள்ள இரண்டு புதிய இயற்கை பாதைகள்
18 கிலோமீட்டர் நீளம் கொண்டவை, இந்த இரு பாதைகளும் அடுத்த மூன்று ஆண்டுகளில் தயாராகும் என் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜூரோங் வெஸ்ட்டில் சண்டையிட்டுக்கொண்ட 2 பெண்கள் கைது – (காணொளி)

கிளமெண்டி வனப்பகுதியில் நீர் ஓடை ஒன்றும் உள்ளது. மழை நாளில் ஓடையில் தண்ணீரின் அளவு உயர்ந்து வனப்பகுதிக்குள் வருவோருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும், புதிய பாதைகளை உருவாக்குவதன் மூலம் அதற்கான சாத்தியமும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள ஓல்டு ஜூரோங் லைன் (Old Jurong Line) இயற்கை பாதை தற்போது பயன்பாட்டில் இல்லாத ரயில் தடத்தில் அமைய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் அறியா வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் உள்ளம்..!