ஆங்கிலம் அறியா வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் உள்ளம்..!

(Photo: NY Times)

வேலையிடத்தில் பணிபுரியும் தனது சக நண்பர்கள் ஆங்கில மொழியை புரிந்துகொள்வதில் சிரமத்தை சந்தித்து வந்தனர். தற்போது அவ்வாறு சிரமப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளார் திரு. சின்னையா பிரபு.

சுகாதாரம் மற்றும் வேலையிடப் பாதுகாப்புக் குறித்த தகவல்களை அவரவர் தாய் மொழிகளில் பெற வேண்டும் என்று அவர் நூலகங்களை துவங்கியுள்ளார்.

சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்களால் மொத்த வேலைவாய்ப்பு சரிவு

வெளிநாட்டு ஊழியர்களின் சொந்த மொழியில் அவற்றை மொழிபெயர்த்து, நூலகமாக அதனை அமைத்தும் கொடுத்துள்ளார் திரு. பிரபு.

முதலில் கூகிள் மொழிபெயர்ப்பு சேவைகளைப் பயன்படுத்தி புத்தகங்களைத் தமிழ் மொழியில் மாற்றம் செய்து வழங்கினார்.

இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் தாய் மொழியில் தேவையான தகவல்களை துல்லியமாக புரிந்துகொள்ள முடிந்தது. மேலும், அவர்கள் நூலகங்களை பயன்படுத்தவும் இது வழிவகை செய்தது.

Seithi

இந்த முயற்சிக்காக 36 வயதான அவருக்கு bizSAFE Champion விருது வழங்கப்பட்டது.

வேலையிடத்தில் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது தம்முடைய கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

“சிங்கப்பூர் என்ன விலை?” – பேரம் பேசிய வெள்ளைக்காரர்… கையெழுத்தான ஒப்பந்தம்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு