ஜூரோங் வெஸ்ட்டில் சண்டையிட்டுக்கொண்ட 2 பெண்கள் கைது – (காணொளி)

2 women arrested after catfight at Jurong West
Photo: Stomp

960 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 92ல் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கடைகளுக்கு அருகில் அந்த இரு பெண்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சியை ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.

ஆங்கிலம் அறியா வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் உள்ளம்..!

கடந்த ஜூலை 27ஆம் தேதி காலை 8.05 மணிக்கு, இந்த சண்டை குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர், 42 வயதான இரண்டு பெண்களும், சச்சரவில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்களால் மொத்த வேலைவாய்ப்பு சரிவு