நீங்கள் சிங்கப்பூர் லாட்டரி வென்றுவிட்டால், பணத்தை வாங்க, சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?

Singapore Toto

சிங்கப்பூர் லாட்டரியை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். அதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் நீங்கள் முறைப்படி சிங்கப்பூரில் வசிப்பராக இருக்க வேண்டும். உங்களுடைய வயது லாட்டரி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் தகுதியானதாக இருக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துவிட்டால், பரிசுத்தொகையை பெற நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாகவோ அல்லது சிங்கப்பூர் PR வாங்கியவராகவோ இருக்கத்தேவையில்லை. உங்களுடைய வயதுக்கான சான்று காட்ட வேண்டும்.

நீங்கள் முறைப்படி சிங்கப்பூரில் விசா பெற்று வாசிப்பதைக்காட்டினால் போதுமானது. வேறு எந்த ஆவணங்களும் தேவைப்படாது. சில நேரங்களில் பெரிய அளவிலான தொகையை வெல்லும் போது, உங்களுக்கு சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெறக்கூட வாய்ப்பிருக்கிறது.

எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

பரிசு தொகைக்கு வரி கட்ட வேண்டியது இல்லை

சிங்கப்பூரில், IRAS (சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்) இணையப் பக்கமான www.iras.gov.sg இன் படி, “4டி, டோட்டோ, கால்பந்து, சிங்கப்பூர் ஸ்வீப், குதிரைப் பந்தயம், ஜாக்பாட் வெற்றிகள் போன்ற பந்தயம் மூலம் கிடைத்த வெற்றிகளுக்கு சிங்கப்பூரில் வரி விதிக்கப்படாது.

ஏனெனில் அந்த வருமானம் ஈட்டும் வழி இயல்புடையவை அல்ல.  உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் இது ஒரே மாதிரியாக இருக்கும். இருப்பினும் நீங்கள் இருமுறை சரிபார்க்க விரும்பலாம். உங்கள் பணத்தைப் பெறுவதற்கு, சிங்கப்பூர் பூல்ஸ் இணையதளத்தில், http://www.singaporepools.com.sg என்பதில் விண்ணப்பிக்கலாம்.