இந்திய விமானங்களில் இது கட்டாயம் வேண்டும் – கலாசார கவுன்சில் கோரிக்கை

indian flights ICCR

இந்தியாவின் பாரம்பரிய இசை, இந்திய விமானங்களில் ஒலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கலாசார கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு இந்திய கலாச்சார தொடர்பு கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய கணவரின் வீட்டிற்கு சென்ற மனைவி மர்மமான முறையில் மரணம் – போராட்டத்தில் உறவினர்கள்

அந்த கோரிக்கையின் படி, இந்திய நாட்டின் பாரம்பரிய இசையானது, வாடிக்கையாளர் சேவை விமானங்களில் ஒலிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இப்படி செய்வதால், சர்வதேச பயணிகள் அனைவரும் இந்திய இசையை ரசிக்க முடியும் என்றும், கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி உள்ளிட்ட இசைகளின் புகழை பரப்ப முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றபப்டும் என்றும் அமைச்சர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

பெயர், புகைப்படம் இல்லாமல் 2 ஆண்டுகளாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி செய்யும் இளைஞர்!