சிங்கப்பூருக்கு வருகை தந்த 1.1 மில்லியன் இந்திய சுற்றுலா பயணிகள்

சிங்கப்பூர்
Unsplash

சிங்கப்பூருக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் எந்த நாடு டாப் வரிசையில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.

கடந்த 2023 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரை சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் புள்ளிவிவரத்தை நேற்று (பிப்ரவரி 1) சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) வெளியிட்டது.

18வது மாடியில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டவர்.. மரத்தில் விழுந்து பரிதாப மரணம்

அதில் முதல் இடத்தை இந்தோனேசியா பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அங்கிருந்து சுமார் 2.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

இரண்டாவது பெரிய சந்தையாக சீனா உள்ளது. அங்கிருந்து சுமார் 1.4 மில்லியன் பயணிகள் இங்கு வந்துள்ளனர்.

Photo: STB

அடுத்த இடத்தில், இந்தியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

அந்தந்த நாடுகளில் இருந்து தலா 1.1 மில்லியன் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

Photo: STB

இங்கு இருந்தபோது செலவு செய்து ரசீது (tourism receipt-generating) அதிகம் பெற்ற நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. (S$2.3 பில்லியனுடன்)

அந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

Photo: STB

சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்