சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்

singapore jobs
(Photo: Economic Times)

முதலாளிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நீக்குப்போக்கான வேலை (flexible work) ஏற்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களை முத்தரப்பு பணிக்குழு உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வரும் என்றும், அதனை முதலாளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் பணிக்குழு குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு

சிங்கப்பூரில் உள்ள சில முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஏனெனின் அவ்வாறு செய்யத் தவறினால் திறமையான ஊழியர்களை ஈர்ப்பதிலும் தக்கவைத்துக் கொள்வதிலும் பிரச்சனைகளை எதிர்நோக்கி ஊழியர்களை இழக்க நேரிடும் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.

இந்நிலையில், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

வேலையிடத்தை தவிர வேறு இடங்கள் அல்லது வீட்டில் இருந்து வேலைகளை செய்ய அந்த வழிகாட்டுதல்கள் ஆதரவளிக்கும் என மனிதவள அமைச்சர் கன் சியோவ் ஹுவாங் கூறினார்.

ஆனால் சில வகையான வேலைகள், வேறு இடங்கள் அல்லது வீட்டிலிருந்து செய்ய ஏற்றதாக இல்லாவிட்டால் அது உற்பத்தித்திறனை பாதிக்குமா என்பது குறித்து சில முதலாளிகள் கவலை கொண்டுள்ளனர்.

அந்த வழிகாட்டுதல்களில், ஊழியர்கள் நீக்குப்போக்கான வேலைகளுக்கு எப்படி கோரிக்கை வைப்பது, அந்த கோரிக்கைகளை முதலாளிகள் எவ்வாறு கையாள வேண்டும் உட்பட அனைத்து விதிமுறைகளும் இடம்பெறும்.

வழிகாட்டுதல்கள் வெளியான பிறகு முழு விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வேலையில்லாமல் பல வருஷம் கஷ்டப்பட்டவருக்கு இப்போ தான் வேலை கிடைச்சது”.. விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் – கண்ணீர் வடிக்கும் தங்கை

“வேலையில்லாமல் பல வருஷம் கஷ்டப்பட்டவருக்கு இப்போ தான் வேலை கிடைச்சது”.. விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் – கண்ணீர் வடிக்கும் தங்கை