“வேலையில்லாமல் பல வருஷம் கஷ்டப்பட்டவருக்கு இப்போ தான் வேலை கிடைச்சது”.. விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் – கண்ணீர் வடிக்கும் தங்கை

accident-driver-family jobless
Telegram

சோவா சூ காங் வேயில் கடந்த ஜன.29 அன்று மூன்று கனரக வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 56 வயதான கனரக ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த ஓட்டுநர், அன்று மாலை தனது குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து இரவு உணவை உண்ண திட்டமிட்டிருந்தார் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு

இறந்தவரின் தங்கை, ஷின் மின் டெய்லி நியூஸுக்கு அளித்த பேட்டியில் இந்த விவரங்களை வெளியிட்டார்.

விபத்து நடந்த நாளுக்கு முந்தைய நாள் (ஜன.28) தான் அவரின் தங்கை இரவு உணவுக்கு முன்பதிவு செய்துள்ளார்.

ஆனால், தனது சகோதரனை இனி ஒருபோதும் என்னால் பார்க்கவே முடியாது என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தங்கை கண்ணீர் மல்க கூறினார்.

இறந்த ஓட்டுநர் அவர்களின் குடும்பத்தின் ஒரே ஒரு மகன் என்று தங்கை பகிர்ந்து கொண்டார்.

இந்த கோர விபத்து நடப்பதற்கு முன்பு, அவர் சில ஆண்டுகளாக வேலையை இழந்து தவித்துள்ளார், அதோடு சேர்த்து பல இன்னல்களையும் அவர் அனுபவித்தார் என தங்கை கூறினார்.

ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருக்கு நிரந்தரமான நல்ல வேலை கிடைத்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி கண் கலங்கினார்.

அவர் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் வேலை செய்வார் என்றும், தான் சம்பாரித்தால் தான் தனக்கு சாப்பாடு என அவர் கடினமாக உழைத்து வந்தார் எனவும் அவர் சொன்னார்.

3 டிரக், 2 கார்கள் மோதி விபத்து.. டிரக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வேலைவாய்ப்பு மந்தம்.. இரண்டு மடங்கு அதிகரித்த ஆட்குறைப்பு