சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு

TOTO winners
Hin Teck Leong Trading Company

சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் TOTO குலுக்கலில் இரண்டு பேர் முதல் ஜாக்பாட் பரிசை தட்டிச்சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் (29 ஜனவரி) நடந்த அந்த குலுக்களுக்கான குரூப் 1 முதல் பரிசு S$3,172,594 வெள்ளி ஆகும்.

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வேலைவாய்ப்பு மந்தம்.. இரண்டு மடங்கு அதிகரித்த ஆட்குறைப்பு

இந்நிலையில், வெற்றி பெற்ற இருவரும் குரூப் 1 முதல் பரிசுத் தொகையை தலா S$1,586,297 என பகிர்ந்து கொள்கின்றனர்.

முதல் பரிசுக்கான வெற்றி எண் 20, 22, 24, 28, 40, 49 மற்றும் கூடுதல் எண் 27 ஆகும்.

இந்த டிராவின் இரண்டாவது பரிசை 6 பேர் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் தலா S$67,589 என்ற தொகையை பகிர்ந்து கொள்வார்கள்.

அதே போல மூன்றாவது பரிசை 187 நபர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருவருக்கு S$361 தொகை கிடைக்கும்.

வெற்றிபெற்ற முதல் பரிசுக்கான டிக்கெட்டுகளில் ஒன்று ஆன்லைனில் வாங்கப்பட்டது. இன்னொன்று பிளாக் 761 யுசூன் ஸ்ட்ரீட் 72 இல் உள்ள Singapore Pools யுசூன் N7 கிளையில் வாங்கப்பட்டது.

ஒன்று 1 QuickPick System 8 Entry முறையிலும், மற்றொன்று 1 System 7 Entry முறையிலும் வாங்கப்பட்டது.

ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?

சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?

வேன் மோதி 12 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே மரணம் – ஓட்டுநர் கைது