சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?

toto-5-milion-special feb-2-2024
Google Maps & Singapore Pools

சிங்கப்பூர் TOTO, 4D போன்ற லாட்டரி டிக்கெட்டுகளை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் வாங்க முடியும்.

அவ்வப்போது நடைபெறும் மிக பிரம்மாண்ட லாட்டரி குலுக்கல் போட்டியில் டிக்கெட் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.

மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணையதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு

TOTO, 4D போன்ற லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க விரும்புவோர் முதலில் ஆன்லைனில் ஒரு கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.

அதற்கு முக்கியமாக நீங்கள் சிங்கப்பூரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் அல்லாமல் வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்த ஆன்லைன் கணக்கை துவங்க முடியாது.

ஏனெனில், Singpass மற்றும் சிங்கப்பூரில் நீங்கள் வசிக்கும் முகவரியும் இருந்தால் தான் அந்த ஆன்லைன் கணக்கை துவங்க முடியும்.

மேலும், உள்ளூர் வங்கியில் வங்கி கணக்கு (Bank Account) கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சிங்கப்பூரர்கள், நிரந்தவாசிகள் (PR) மற்றும் வேலை அனுமதியில் (Work passes) இங்கு இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் யாராக இருந்தாலும் இந்த கணக்கை துவங்க முடியும்.

Singapore pools இணையதளத்தில் நேரடியாக சென்று இந்த கணக்கை துவங்க முடியும். அதற்கான லிங்க்: https://online.singaporepools.com/en/account/registration

அதில் சென்று Sign Up தெரிவை தேர்ந்தெடுத்து உங்கள் Singapore pools கணக்கை துவங்கலாம்.

பின்னர், அந்த ஆன்லைன் கணக்கில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட சிறிய தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து நீங்கள் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கலாம்.

நீங்கள் வாங்கிய டிக்கெட் வெற்றி பெற்றால் அந்த தொகை நேரடியாக உங்கள் ஆன்லைன் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அதை நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டு ATM இல் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் ஸ்வீப் டிக்கெட்டுகளை மட்டும் ஆன்லைன் தளத்தில் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் சந்திரப் புத்தாண்டை (Lunar New Year) முன்னிட்டு பிப்ரவரி 2, அன்று மற்றொரு TOTO குலுக்கல் நடைபெற உள்ளது. அந்த குலுக்கல் போட்டியின் முதல் பரிசு S$5 மில்லியன் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இந்த சம்பளம் கொடுக்கணும் – வந்தது புதிய தளம்