வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வேலைவாய்ப்பு மந்தம்.. இரண்டு மடங்கு அதிகரித்த ஆட்குறைப்பு

More retrenchments in Singapore

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14,320 ஆக பதிவாகியுள்ளது, அதே வேளையில் அதற்கு முந்தைய ஆண்டில் அது 6,440 ஆக இருந்தது.

வேன் மோதி 12 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே மரணம் – ஓட்டுநர் கைது

வர்த்தகத்தில் மாற்றம் செய்தது அல்லது மறுசீரமைப்பு செய்ததே அந்த ஆட்குறைப்புக்கான முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.

மொத்த வர்த்தகம், தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி போன்ற துறைகளில் உலகளவில் நிலவிய பொருளாதார தாக்கத்தால் இது ஏற்பட்டதாக MOM தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட உள்ளூர் ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைவாக இருந்ததாக MOM குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் காலாண்டுகளின் நிலவரப்படி; கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் 3,200 ஊழியர்களே ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய மூன்றாம் காலாண்டில் 4,110 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் சந்தை முன்னுரைப்பின் மதிப்பீடுகளின்படி, இந்த புள்ளிவிவரங்களை மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (ஜனவரி 31) வெளியிட்டது.

Coldplay அதிஷ்ட குலுக்களில் வென்ற வெளிநாட்டு ஊழியர்கள்… மகிழ்ச்சி தெரிவித்து ஆரவாரம்