Coldplay அதிஷ்ட குலுக்களில் வென்ற வெளிநாட்டு ஊழியர்கள்… மகிழ்ச்சி தெரிவித்து ஆரவாரம்

migrant-workers-free-tickets-coldplay
krsnasfreemeal/TikTok

சிங்கப்பூரில் மூன்று வெளிநாட்டு ஊழியர்களுக்கு Coldplay டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 27) நடந்த இசைநிகழ்ச்சிக்குச் சென்று, அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

மெரினா பே சாண்ட்ஸின் 4வது கோபுர கட்டடம்: 587 ஹோட்டல் அறைகள்.. 12,000ச.மீ பரப்பளவில் சில்லறை வர்த்தகம் – மாஸ் காட்டும் திட்டம்

ஊழியர்கள், இந்த இலவச டிக்கெட்டுகளை லிட்டில் இந்தியாவில் உள்ள Krsna’s Free Meals உணவகத்தில் நடந்த அதிஷ்ட குலுக்கலில் வென்றதாக சொல்லப்பட்டுள்ளது.

Krsna’s Free Meals என்பது சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு தினமும் காலை மற்றும் மதிய உணவை இலவசமாக வழங்குகிறது.

பிரிட்டிஷ் இசைக்குழுவான Coldplay மற்றும் சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பான Love Button ஆகியவற்றுடன் இணைந்து அந்த உணவகம் சமூக சேவையாற்றியது.

இந்நிலையில் Coldplay, Love Button ஆகியவற்றின் ஊழியர்கள் சிலர் Krsna’s Free Meals உணவகத்தில் தொண்டூழியம் செய்தனர்.

அப்போது அங்கு சாப்பிட வந்த நபர்களுக்கு அதிஷ்ட குலுக்கல் வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

6 நாட்கள் நடக்கும் அந்த இசைநிகழ்ச்சிக்கு, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 27) அவர்கள் சென்று மகிழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நாளை ஜன.31 ஆம் தேதியுடம் 6 நாள் இசைநிகழ்ச்சியை அது நிறைவு செய்கிறது.

சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?

தனது மகளையே பலமுறை நாசம் செய்ய முயன்ற சிங்கப்பூரர்.. 13 ஆண்டுகள் சிறை, 16 பிரம்படிகள் விதிப்பு