தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு இண்டிகோ விமானம் வழங்கும் சிறப்பு சலுகை

தடுப்பூசி போட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக அனைத்து உள்நாட்டு விமானங்களுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடியுடன் இண்டிகோ தனது ‘வாக்ஸி ஃபேர்’ திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும், பயணிகளை மீண்டும் பயணம் செய்ய ஊக்குவிக்கவும் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டு வாழ்க்கை…பிரிய மனமில்லாமல் அழுத மனைவி; இணையத்தில் வைரல்!

இந்த தடுப்பூசி திட்டத்தை புதன்கிழமை பிப்ரவரி 2ஆம் தேதி ட்வீட் மூலம் மீண்டும் இண்டிகோ அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த பிறகு, பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தச் சலுகையை ஆகஸ்ட் 2021ல் அந்நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்தியது.

முன்பதிவு செய்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் உள்ள பயணத் தேதிகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும்.

மேலும், இண்டிகோ இணையதளத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.

முன்பதிவு செய்யும் போது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகளுக்கு இந்த தள்ளுபடி கட்டணம் பொருந்தும், விமான நிறுவனம் வழங்கிய தகவலின்படி பயணிகள் இந்தியாவில் இருக்க வேண்டும்.

திருமண நாளன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மனைவி; சுமார் $650,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு.!