எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி எதிர்பார்த்ததை விட உயர்வு!

Photo: REUTERS

 

சிங்கப்பூரின் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி (Non- oil domestic exports-‘Nodx’) கடந்த மாதம் எதிர்பார்த்ததை விட சிறந்த வேகத்தில் உயர்ந்தது. இதற்கு காரணம் சிறப்பு இயந்திரங்கள் (Specialized Machinery), மருந்துகள் (Pharmaceuticals) மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் (Petrochemicals) போன்ற மின்னணு மற்றும் மின்னணு அல்லாத பொருட்களின் ஏற்றுமதி (Electronic and Non- Electronic Shipments) ஆகும்.

நடப்பாண்டு ஜூலை மாதத்தில் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி (Nodx) ஆண்டு அடிப்படையில், 12.7% உயர்வு கண்டது. இது கடந்த ஜூன் மாதத்தில் 15.9% ஆகி பதிவாகியிருந்தது. அரசு நிறுவனமான எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (Enterprise Singapore- ‘ESG’) நேற்று (17/08/2021) வெளியிட்டிருந்த புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைக் காட்டிலும், நடப்பாண்டு ஜூலை மாதத்தில் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி 12% கூடும் என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் (Bloomberg) நடத்திய கருத்தாய்வில் ஆய்வாளர்கள் முன்னுரைத்திருந்தனர்.

இலவச முகக்கவசங்கள் விநியோகம் ஆக. 26- ஆம் தேதி தொடங்குகிறது!

இருப்பினும், மாதந்தோறும் பருவநிலை சரிசெய்யப்பட்ட அடிப்படையில், ஜூன் மாதத்தில் 6% உயர்ந்த எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி, கடந்த ஜூலை மாதம் 0.9% ஆக சரிவடைந்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், மின்னணு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைக் காட்டிலும், நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 15% வளர்ச்சிக் கண்டது. இது கடந்த ஜூன் மாதத்தில் 25.5% ஆக இருந்தது.

கணினி ஏற்றுமதி 83.2 சதவீதம் உயர்ந்தது. ஒருங்கிணைந்த சுற்றுகளின் ஏற்றுமதி 11.1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் டையோடுகள் (Diodes) மற்றும் டிரான்சிஸ்டர்களின் (Transistors) ஏற்றுமதி 29.7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 13.2 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மின்னணு அல்லாத பொருட்களின் ஏற்றுமதி (Shipments of Non- Electronic Products) கடந்த ஜூலை மாதம் 12.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிறப்பு இயந்திரங்கள் ஏற்றுமதி 56.8 சதவீதம், மருந்துகள் 48.3 சதவிகிதம், பெட்ரோ கெமிக்கல்ஸ் 49.4 சதவீதம் உயர்ந்துள்ளன, இது மின்னணு அல்லாத ‘Nodx’- ன் வளர்ச்சிக்கு மிகவும் பங்களித்தது.

ஆப்கானிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த போவதில்லை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு.!

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி குறைந்து போனாலும், ஒட்டுமொத்தமாக முதல் சந்தைகளுக்கு எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி கடந்த மாதம் உயர்ந்தது. கடந்த மாதத்தில் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதியின் உயர்வுக்கு மிகப்பெரிய பங்களிப்பாளர்கள் சீனா (58.5 சதவீதம்), ஐரோப்பிய ஒன்றியம் (61.5 சதவீதம்) மற்றும் தைவான் (37 சதவீதம்) ஆகிய நாடுகள் இருந்தன.

ஆண்டு அடிப்படையில், தொடர்ந்து எட்டு மாதங்களாக எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி உயர்ந்து வருவதை அடுத்து, நடப்பாண்டில் ஒட்டு மொத்த அளவில், அந்த வளர்ச்சி விகிதம் ஏழு முதல் எட்டு சதவீதமாக இருக்கும் என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு எதிர்பார்க்கிறது.

கோவிட் -19 தடுப்பூசிகள் வேகம் பெறுவதால் சிங்கப்பூர் தனது பொருளாதாரத்தை முன்னரே கணித்ததை விட வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கிறது. அதிக பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சில முக்கிய சந்தைகளிலும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 11- ஆம் தேதி அன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னறிவிப்பு வரம்பை 6%- லிருந்து 7% ஆக உயர்த்தியது என்பது நினைவுக்கூறத்தக்கது.