இலவச முகக்கவசங்கள் விநியோகம் ஆக. 26- ஆம் தேதி தொடங்குகிறது!

File Photo covid

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் இடைவிடாமல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் பயனாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அரசின் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகள் (Supermarkets) மற்றும் சிங்கப்பூரில் உள்ள மால்களில் (Malls) ஒவ்வொரு குடும்பமும் 50 மருத்துவ தர அறுவை சிகிச்சை முகக்கவசங்களையும் (50 Medical- Grade Surgical Masks), 25 என் 95 முகக்கவசங்களையும் (25 N95 Masks) பெற்றுக் கொள்ளலாம் என தெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் (Temasek Foundation) தெரிவித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆடவர் COVID-19 காரணமாக மரணம்

131 பேரங்காடிகள் மூலம் முக்கவசங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச முகக்கவசங்கள் விநியோகம் வரும் செப்டம்பர் 26- ஆம் தேதி வரை நடைபெறும். இலவச முகக்கவசம் விநியோகம் தொடர்பாக, பெரிய அளவிலான பேரங்காடிகளுடனும், குறிப்பிட்ட சில கேப்பிட்ட லேண்ட் கடைத்தொகுதிகளுடனும் தெமாசெக் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.

ஷெங் சியோங் (Sheng Siong), என்டியுசி ஃபேர்பிரைஸ் (NTUC Fair Price), கோல்டு ஸ்டோரேஜ் (Cold Storage), பிரைம் (Prime), ஜயன்ட் (Giant) போன்ற பேரங்காடிக் குழுமங்கள் அவற்றில் அடங்கும். முகக்கவசங்களைப் பெற குடியிருப்பாளர்கள் தங்களது எஸ்.பி குழும மின் கட்டண ரசீதை எடுத்துச் செல்ல வேண்டும். அது தாள் (அல்லது) மின்னணு ரசீதாக இருக்கலாம்.

“அதிக எண்ணிக்கையிலான முகக்கவசங்கள் வழங்கப்படுவதால், அவற்றை இருப்பில் வைக்கும் அளவிற்கு மருந்தகங்களில் இடம் இருக்காது என்பதால், முகக்கவசங்கள் விநியோக நடவடிக்கையில் மருந்தகங்கள் இடம் பெறாது. அதேபோல் எல்லா பேரங்காடிகளும் விநியோக நடவடிக்கையில் ஈடுபடாது. கையிருப்பு அதிகமாக இருப்பதால், இலவச முகக்கவசங்கள் விநியோகம் தொடங்கும் முதல் மூன்று நாட்களிலேயே, முகக்கவசங்களைப் பெற பேரங்காடிகளுக்கு பொதுமக்கள் விரைய வேண்டாம்” என்று தெமாசெக் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாகி ஹோ சிங் (Temasek Holdings Chief Executive Ho Ching) தெரிவித்துள்ளார்.

பணிப்பெண்ணுக்கு சூடு வைத்த நபருக்கு சிறை!

தெமாசெக் அறக்கட்டளை நிறுவனம், கடந்த மாதம் அனைத்து வீடுகளுக்கும் இரத்த ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதிக்கும் ஆக்சிமீட்டர் கருவியை (Oximeter) இலவசமாக வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.