மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஊழியர்… வெளிநாட்டுக்குத் தப்பி, திருச்சி வந்தபோது கைது!

"சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க" - சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழக ஊழியர் வெளிநாட்டுக்குத் தப்பிய நிலையில் தற்போது பிடிபட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அவர், திருச்சி விமான நிலையம் வந்த போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கொள்ளையில் ஈடுபட்ட துஷீந்தர் சேகரனுக்கு சிறை, பிரம்படி – கார்த்திக் வழக்கு நிலுவை!

காரைக்குடியில், வள்ளுவர் நபர் – செம்பருத்தி வீதியை சோ்ந்த 60 வயதான அருணாச்சலம் என்ற அந்த ஊழியர் கடந்த 2019ஆம் ஆண்டு மோசடி வழக்கில் கைதானவர்.

பின்னர் அவர், ஜாமீனில் வெளியேயும் வந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் எந்த வித நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் ஆஜராகவில்லை. பின்னர் அவர் மலேசியாவுக்கு தப்பி சென்றுள்ளார்.

இதனால் அவரை தேடப்படும் குற்றவாளி என போலீசார் அறிவித்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியாவிலிருந்து ஏா் இந்தியா விமானத்தில் திருச்சி வந்த அவரை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் தகவலில் அடிப்படையில் திருச்சி வந்த மதுரை காவல்துறை, அருணாச்சலத்தை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது.

சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?